தினமலர் செய்தி : சென்னை: தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: டெண்டர்கள் வழங்குவதில் அதிமுக அரசில் வெளிப்படைத்தன்மை இல்லை. அரசின் டெண்டர்கள் ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் படிவங்கள் கூட ஆளுங்கட்சிகாரர்கள் அல்லது அவர்கள் வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஊழலுக்கு இடம் அளிக்காமல் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Comments