லாரிகள் 'ஸ்டிரைக்' 'பார்சல் புக்கிங்' ரத்து

சென்னை : வரும், 30ல் நடைபெற உள்ள, லாரிகள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக, நாளை முதல், 'பார்சல் புக்கிங்' செய்வதில்லை, என, தமிழக லாரி புக்கிங் ஏஜன்ட்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 

தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் சங்கம் என்ற, 'சிம்டா' சார்பில், வரும், 30ல், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில், லாரி ஸ்டிரைக் நடைபெற உள்ளது.

அதற்கு ஆதரவாக, 27ம் தேதி முதல், வட மாநிலங்களுக்கு ஏற்றப்படும் பொருட்களுக்கான புக்கிங்கையும், 29ம் தேதி முதல், தமிழக பொருட்களுக்கான புக்கிங்கையும் நிறுத்த, தமிழக லாரி புக்கிங் ஏஜன்ட்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

இதனால், தினமும், 5,௦௦௦ கோடி ரூபாய் பொருட்கள் தேக்கமடையும்; 200 கோடி ரூபாய் வரை, லாரி உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்படும் என, கூறப்படுகிறது.

Comments