
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக தொடர்ந்து மணல் அள்ளி வரும் தனியார் நிறுவனங்களுக்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்து வருகின்றனர்.கடந்த 2013ல் தாது மணல் ஆலைகள் தொடர்பாக வருவாய் துறை செயலர் ககன் தீப் சிங்பேடி தலமையிலான குழுவினர் ஆய்வு நடத்தினர். இதன்படி மணல் அள்ளுவதை நிறுத்த உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து மணல் அள்ளுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து சப்.கலெக்டர் விஷ்ணு தலைமையிலான அதிகாரிகள் திசையன்விளை பகுதியில் உள்ள வி.வி., மினரல் நிறுவன கிளை ஆலைகள் உள்பட 15 ஆலைகளுக்கு சீல் வைக்கும் பணி நடந்து வருகிறது.
Comments