ஜெ., மரணம் குறித்து மாநில அரசு விசாரணை:மத்திய அரசு தகவல்

தினமலர் செய்தி : புதுடில்லி : ஜெயலலிதா மரணம் தொடர்பாக மாநில அரசின் விசாரணை அறிக்கைக்கு பிறகு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் கூறினார்.

லோக்சபாவில், இன்று(மார்ச்14 ) ஓ.பி.எஸ்., ஆதரவு எம்.பி.,க்கள் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதற்கு சசி ஆதரவு எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அமளி ஏற்பட்டது.

அமளி:

நாமக்கல் எம்.பி., சுந்தரம் பேசுகையில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, 75 நாட்களாக அவரை யாரையும் சந்திக்க சந்திக்க அனுமதிக்கவில்லை. நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக மரணடைந்ததாக கூறுகின்றனர். ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதிர்ச்சி:

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஆனந்தகுமார், ஜெயலலிதாவின் திடீர் மரணம் நாட்டிற்கும், அவைக்கும் பெரும் கவலை அளிக்கிறது. ஜெயலலிதா மரணம் அசாதாரணமான சூழ்நிலையில் நிகழ்ந்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர். இருப்பினும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்த இந்த அறிக்கை கிடைத்த பின்னர் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments