ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெற உள்ளது. சசிகலா அதிமுக வேட்பாளராக திடீரென டிடிவி தினகரன் அறிவிக்கப்பட்டார். திமுக வேட்பாளராக பத்திரிகையாளர் மருது கணேஷ் நிறுத்தப்பட்டுள்ளார்.
கருத்து கணிப்பு
டிடிவி தினகரன் நிறுத்தப்பட்டதை சசிகலா அதிமுக வேட்பாளர்களே சசிக்காமல் இருக்கின்றனராம். இதனிடையே அதிமுக வேட்பாளராக தினகரன்? என்ற தலைப்பில் நமது ஒன் இந்தியா தமிழ் இணைய தளத்தில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
77% பேர் கணிப்பு இது இக்கருத்து கணிப்பில் மொத்தம் 16,069 பேர் பங்கேற்றனர். இவர்களில் 12,342 பேர் அதாவது 76.81 % பேர் தினகரனுக்கு படுதோல்வி உறுதி என தெரிவித்துள்ளனர்.
வேற ஆளே இல்லையா வேற ஆளே இல்லையா அதிமுகவுக்கு என்ற ஆப்ஷனுக்கு 2,037 பேர் அதாவது 12.68% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தினகரன் அருமையான தேர்வு மற்றும் ஜெயிக்க வாய்ப்பு உண்டு என தலா 5% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அருமையான தேர்வு... ஜெயிப்பார் தினகரன் அருமையான தேர்வு என 857 பேர் (5.33%) கூறியுள்ளனர். தினகரன் ஜெயிக்க வாய்ப்பு உண்டு என 833 பேர் (5.18%) கருத்து தெரிவித்துள்ளனர்.
Comments