சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொது செயலர் சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் அவருக்கு அளிக்கப்படும் வசதிகள் குறித்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜவேலாயுதம் என்பவர் கடந்த பிப்ரவரி 20ம் தேதி பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார்.
டிஐஜி பதில்: இதற்கு பெங்களூரு சிறை டி.ஐ.ஜி., அளித்த பதில்: சிறையில் சசிகலாவுக்கு டிவி வசதி அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர தனி பாத்ரூம், வாட்டர் ஹீட்டர், ஏசி, பாய் மற்றும் தலையணை வழங்கப்படவில்லை. பிப்ரவரி 20ம் தேதி சசிகலா, அவரது உறவினர் தினகரனை 40 நிமிடங்கள் சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.
பெங்களூரு சிறையிலிருந்து சென்னை சிறைக்கு மாற்ற வேண்டும் என சசிகலா தரப்பிலிருந்து மனு ஏதும் வரவில்லை. இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments