ஜெ., மரணம் குறித்து விசாரணை தேவை ஜனாதிபதியிடம் எம்.பி.,க்கள் வலியுறுத்தல்

தினமலர் செய்தி : 'ஜெயலலிதா மரணம் குறித்து, மத்திய அரசின் மேற்பார்வையில், நீதி விசாரணையோ, சி.பி.ஐ., விசாரணையோ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தோ விசாரணை நடத்த வேண்டும்' என்று ஜனாதிபதியிடம், அ.தி.மு.க., -- எம்.பி.,க்கள் 12 பேர் கோரிக்கை வைத்தனர்.

பன்னீர்செல்வம் ஆதரவுஎம்.பி.,க்களான, மைத் ரேயன் தலைமையிலான,12 பேர் அடங்கிய குழு, நேற்று, டில்லியில் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசியது. இந்த சந்திப்புக்கு பின், மைத்ரேயன் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அல்ல என பொது மக்கள், அ.தி. மு.க., தொண்டர்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து உண்மையான நிலையை கண்டறிந்து, நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். மருத்துவ மனையில் சேர்ப்பதற்கு முன், ஜெ.,க்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்த விசாரணை அவசியம். 

அவருக்கு மருத்துவமனையில் என்ன மாதிரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென, அவரது ரத்த உறவுகளின் ஒப்புதலுடன் தான் டாக்டர்கள் முடிவு எடுத்திருக்க வேண்டும்.அப்படியானால், யார், யார் எல்லாம் அதில் சம்பந்தப்பட்டு, அத்தகைய முடிவு களை எடுக்க துணையாக இருந்தனர் என்பது குறித்த விசாரணையும் தேவை.

ஜெ., மரணம் குறித்த விசாரணையை மேற்கொள்வதற்கு தற்போதைய மாநில அரசுக்கு தகுதியே இல்லை. இப்போதுள்ளது, 122 எம்.எல்.ஏ.,க்களுக்கு உண்டான அரசுதான் இது;மக்களுக்கான அரசு கிடையாது.

எனவே, ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணையோ, சி.பி.ஐ., விசாரணையோ அல்லது சிறப்பு புலனாய்வு குழு அமைத்தோ விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதில் உள்ள மர்மத்தைவெளிக் கொண்டு வர வேண்டும். 

இதை ஜனாதிபதியிடம், கோரிக்கையாக வைத் தோம்.எங்கள் மனுவை வாங்கி,மிகுந்த கவனத் துடன் படித்த, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அதில் உள்ள முக்கிய கருத்துக்களை தன் பேனாவாலேயே அடிக்கோடிட்டு குறித்துக் கொண்டார்.

துணை சபாநாயகர் தம்பிதுரை குறித்து நாங் கள் எதுவும் குறிப்பிடவில்லை. காரணம், தீபா யார், தீபக் யார் என்றெல்லாம் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.அவர் போகிற போக்கை பார்த்தால், அடுத்து, சசிகலா யார் என்று விரை வில் கேட்கக்கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.

Comments