நடிகை பாவனா செய்திக்கு ஒரு விளக்கம்

தினமலர் செய்தி : நடிகை பாவனாவுக்கு நடந்த நிச்சயதார்த்தம் குறித்து, தினமலர் ஈரோடு பதிப்பில் சர்ச்சைக்குரிய தலைப்பில், இன்று (மார்ச் 10) செய்தி வெளியானது. இது குறித்து, வாசகர்களும் தமிழக மக்களும், கடுமையான சொற்களால் தங்கள் எதிர்ப்பையும் விமர்சனத்தையும், வருத்தத்தையும் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

தினமலர் ஈரோடு பதிப்பு, டாக்டர் ஆர்.சத்தியமூர்த்தியை ஆசிரியர், வெளியீட்டாளர் மற்றும் பிரின்டராகக் கொண்டு வெளி வருகிறது. 

தினமலர் இணையதளம் (www.dinamalar.com), தினமலர் சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி பதிப்புகளில் இந்த தலைப்பில் பாவனா பற்றிய செய்தி வெளியாகவில்லை. இந்த பதிப்புகள், டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியை ஆசிரியராகவும், டாக்டர் ஆர்.லட்சுமிபதியை வெளியீட்டாளராகவும் கொண்டு வெளி வருகின்றன என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். 

ஈரோடு தினமலர் வெளியிட்ட செய்தி குறித்து கருத்து தெரிவிக்க விரும்புவோர் கடிதம் மூலம் கீழ்கண்ட முகவரிக்கு எழுதலாம். முகவரி: தினமலர், திரு.வி.க. ரோடு, சூரம்பட்டி, ஈரோடு - 638 009.

Comments