OneIndia News : டெல்லி: சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக நியமித்ததை எதிர்த்து, தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்களை அளித்துள்ளது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து எதிர்க்குரல் எழுப்பிய ஓ.பன்னீர்செல்வத்தின் அணியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் உள்ளிட்ட 10 எம்.பிக்கள் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் சைதியை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து விளக்கம் கேட்டு சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. சசிகலா தரப்பில் நேற்று பதில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக கூடுதலாக சில ஆவணங்களை இன்று பன்னீர்செல்வம் தரப்பு, தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது.
Comments