முதல்வர் மாவட்டத்தில் எதிர்ப்பு அதிகரிப்பு அரசு விழா நடத்த எம்.எல்.ஏ.,க்களுக்கு தடை

தினமலர் செய்தி : தமிழக முதல்வரின் சொந்த மாவட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் மீது தாக்குதல் முயற்சி தொடர்வதால், முதல்வர் ஆதரவு எம்.எல்.ஏ.,க் கள், பொதுக்கூட்டங்களை நடத்தவும், நலத் திட்ட உதவிகளை வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைக் கைதி சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த வர், முதல்வர் பழனிசாமி. அவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களுக்கு, பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்தது.

முதல்வரின்மாவட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் மீது செருப்பு மாலை வீச்சு, முற்றுகை போராட்டம் நடத்தி, பொதுமக்கள் விரட்டி அடித்தனர்.

ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், குறைந்த அளவிலேயே கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்து வருவதால், பிற தொகுதி, எம்.எல். ஏ.,க் கள், பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களில் கலந்து கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.

சேலம் மாவட்ட மக்கள், அ.தி.மு.க., - எம்.எல். ஏ.,க் களுக்கு எதிராக திரும்பியுள்ளதால், பெரும் அசம்பா விதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித் துள்ளனர். முதல்வர் பழனிசாமி, தன் சொந்த மாவட்டமான சேலத்துக்கு வரும் போது பெரியள வில் எதிர்ப்பு கிளம்ப வாய்ப்புள்ளதாக, போலீஸ் தரப்பில் அறிக்கை வழங்கப்பட்டு உள்ளது. இதனால், அ.தி.மு.க., தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.

அந்த அறிக்கையின் அடிப்படையில், நேற்று முதல், ஜெ., பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடத்தப்படுவது, சேலம் மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ளதோடு, அரசின் நலதிட்ட உதவிகள் வழங்குவதும், குறைந்த பட்சம், ஒரு மாதத்துக்கு தள்ளிவைக்க முடிவு செய்து, முதல்வர் பழனிசாமி மூலம் அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

இலவச சைக்கிள் வழங்குவது இழுபறி

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில், ப்ளஸ் 1 வகுப்பு படிக்கும், மாணவ - மாணவி யருக்கு, தமிழக அரசு சார்பில், இலவச சைக்கிள் வழங்கும் விழாக் கள் கடந்த மாதம் முதல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நிகழ்ந்தஅரசியல் மாற்றங்களால், தொகுதி மக்களும், முன்னாள் முதல்வர் மற்றும் தீபா ஆதரவாளர்களும் எம்.எல்.ஏ.,க் கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில், தீபா பேரவையினர், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின் றனர். இதனால், இலவச சைக்கிள் வழங்கும் விழாக்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்குவது இழுபறியாக உள்ளது.

Comments