8 சுயேட்சைகள் வாபஸ் :
ஏப்ரல் 12 ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்தவர்களில் 70 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இந்நிலையில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் இன்று (மார்ச் 27) பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்தது. ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்புமனுக்களில் 8 சுயேட்சைகள் தங்களின் மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இதனால் இதுவரை 62 பேர் களத்தில் இருப்பது உறுதியாகி உள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியலை இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் கமிஷன் வெளியிட உள்ளது.
Comments