ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு காலியாக உள்ள ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 16ஆம் தேதி தொடங்கியது.
திமுக, அதிமுக சசிகலா அணி, அதிமுக ஓபிஎஸ் அணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, பாஜக, நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை, என ஆர்.கே. நகரில் பலமுனை போட்டி நிலவுகிறது.
ஆர்.கே.நகரில் போட்டியிட நேற்று வரை 55 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். கடைசி நாளான இன்று ஓ.பி.எஸ் அணியின் மதுசூதனன், சசிகலா அணியின் டிடிவி தினகரன், பாஜக வேட்பாளர் கங்கை அமரன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை நிறுவனர் தீபா, சமக வேட்பாளர் அந்தோனி சேவியர் ஆகியோர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தனர். இதுவரை 60 பேர் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை திருப்பப் பெற 27 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னமும் ஒதுக்கப்படும்.
Comments