மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சுப்ரீம் கோர்ட், பிப்.,14ல் தீர்ப்பு அளித்தது. அப்போது, ஜெயலலிதா மரணமடைந்ததால், அவரை இவ்வழக்கில் இருந்து நீக்குவதாகவும், மற்ற குற்றவாளிகளான அவருடைய தோழி சசிகலா, அவருடைய உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது.
இந்த நிலையில், ஜெயலலிதா மீதான தீர்ப்பை மறு பரிசீலனை செய்யும்படி, கர்நாடகா அரசு சார்பில் சுப்ரீம்கோர்ட்டில், சீராய்வு மனு தாக்கல் செய்யப் பட்டுள் ளது. அதில் கூறியுள்ளதாவது: அரசியல மைப்பு சட்டம் மற்றும் சுப்ரீம் கோர்ட் விதிகளின் படி, வழக்கில் விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப் பட்ட பிறகு, குற்றம்சாட்டப் பட்டவர் இறந்தாலும், அவருக்கான தண்டனையை அறிவிக்க வேண்டும்.
சொத்துக் குவிப்பு வழக்கில், விசாரணை கோர்ட் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் தண்டனை யும், 100 கோடிரூபாய் அபராதத்தையும் விசாரணை கோர்ட் விதித்துள்ளது. அதன்படி, ஜெயலலிதாவுக் கான தண்டனையையும், அபராதத்தையும் உறுதி செய்ய வேண்டும்.
சிறை தண்டனையை அனுபவிப்பதற்கு, ஜெய லலிதா உயிருடன் இல்லை. அதே நேரத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததால், அவருடைய சொத்துக்கள் மூலம், அபராதத் தொகையான, 100 கோடி ரூபாயை வசூலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு சீராய்வு மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி கள், பினாகி சந்திர கோஸ், அமிதவ ராய் ஆகியோர், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள லாமா என, வரும், ஏப்., 5ல், தங்களுடைய அறையில் விசாரிக்க உள்ளனர்.
Comments