OneIndia News : சென்னை: தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு 2 முதல் 5 ரூபாய் வரை பால் விலையை உயர்த்த முடிவு செய்திருப்பதால் டீ, காபி விலை உயர வாய்ப்புள்ளது. இதற்கு தமிழக பால் முகவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு டோட்லா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ் உள்ளிட்ட முன்னணி பால் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் நாளை முதல் பால் விற்பனை விலையை உயர்த்தப் போவதாக பால் முகவர்களுக்கு சுற்றிக்கை அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.
பால் விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரையும், தயிருக்கான விலையை லிட்டருக்கு 5 ரூபாயும் உயர்த்தப்போவதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இந்த திடீர் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் நாளை முதல் தனியார் பால் விலை உயர்கிறது. டோட்லா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ் பால் விலை, 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது. இதனால் டீ, காபி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விற்பனை விலை உயரும் அபாயம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Comments