ஆய்வு:
தமிழகத்தில் கடந்த 141 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வறட்சி நிலவுகிறது. அணைகள் வறண்டு வருகின்றன. விவசாயம் பொய்த்து விட்டது. இதனையடுத்து, தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும். மத்திய குழு ஆய்வு செய்ய வேண்டும். நிவாரண நிதியாக ரூ.39,565 கோடி வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.இதனையடுத்து மத்திய குழு கடந்த ஜனவரி 22 முதல் 25ம் தேதி வரை ஆய்வு செய்தது. தொடர்ந்து டில்லி சென்ற குழு தமிழகத்தில் நிலவும் வறட்சி குறித்து ஆய்வு செய்தது.
நாளை முடிவு:
தொடர்ந்து தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.2,096. 80 கோடி வழங்க உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. தேசிய செயற்குழுவின் துணை கமிட்டி, தமிழகத்திற்கு ரூ.1,748.28 கோடி வழங்க பரிந்துரை செய்துள்ளது.இக்குழுக்களின் அறிக்கை தொடர்பாக நாளை நடக்கும் உள்துறை அமைச்சகத்தின் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.
Comments