காஞ்சிபுரத்தில் ரூ.4 கோடி நிலம் அபகரிப்பு...சசிகலா, தினகரன் மீது புகார்

Rs. 4 Crore worth land grabbed by Sasikala, Dinakaran? காஞ்சிபுரம்: போலி ஆவணங்களை தயார் செய்து ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாக சசிகலா மற்றும் தினகரன் மீது அளித்த புகாரின்பேரில் காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், சிறுதாவூர் கிராமத்தில் விமானப் படை பிரிவில் பணி செய்து ஓய்வு பெற்றவர் கண்ணன். இவர் மனைவி விஜயலட்சுமி மற்றும் குடும்பத்தினருடன் சிறுதாவூர் கிராமத்தில் வசித்து வருகிறார்.

இவருக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தை பத்தாண்டுகளுக்கு முன் பரணி பீச் ரிசார்டு இயக்குநர்களான சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அபகரித்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று கூறுகின்றனர். எனவே கடந்து நான்கு தினங்கள் முன்பு சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்ததை தொடர்ந்து அந்த புகார் மீது விசாரணை மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பபட்டது. இதில் கண்ணனுக்கு சம்மன் அனுப்பபட்டதை தொடர்ந்து எஸ்பி அலுவலகம் வந்து தன் தரப்பு நியாயத்தை எடுத்து கூறியுள்ளார். மேலும் இரு தரப்பிலும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

Comments