புதிய இடங்கள்:
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தி: கடந்த வருடம் 80 இடங்களில் நடந்த நீட் தேர்வானது, இந்த ஆண்டு மேலும் 23 நகரங்களில் நடக்கும். இதன்மூலம் இந்த வருடம் 103 இடங்களில் நீட் தேர்வு நடக்கும். ஐஐடி ஜேஇஇ தேர்வு நடந்த இடங்களில் நீட் தேர்வு நடக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதியதாக நடக்கும் 23 நகரங்கள் பட்டியலில் தமிழகத்தின் நெல்லை. வேலூர், நாமக்கல் பெயர் இடம் பெற்றுள்ளது.
ஏற்கனவே சென்னை, சேலம், திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நீட் நுழைவுத்தேர்வு நடந்தது. தமிழகத்தில் நீட் தேர்வு நடத்துவதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Comments