வரலாறு காணாத வறட்சி.. கேட்டது 39,565 கோடி.. ஒதுக்கியது வெறும் 1,748 கோடிதான்.. பாஜகவின் ஓரவஞ்சனை

Union government announces drought fund Rs. 1,748 crடெல்லி: தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக 1,748 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை விவசாய மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முற்றிலும் கைவிட்டது. காவிரியிலும் முறையாக தண்ணீர் வழங்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்தது.

இந்த வறட்சியின் காரணமாக சுமார் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை மற்றும் மாரடைப்பால் மரணம் அடைந்தார்கள். இதனிடையே விவசாயிகள் உயிரிழப்பை தடுக்க வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரியும் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் 39,565 கோடி ரூபாய் வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை நேரில் வந்து ஆய்வு செய்த மத்தியக் குழு, வறட்சி நிவாரணமாக தமிழகத்திற்கு 2,096.80 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதனையடுத்து, தேசிய செயற்குழுவின் துணை கமிட்டி 1,748.28 கோடி ரூபாய் மட்டுமே தர பரிந்துரை செய்துள்ளது. இதனையடுத்து, இன்று வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் இன்று 1,748 கோடி ரூபாய் தமிழகத்தின் வறட்சி நிவாரணமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார். தமிழக அரசு கேட்ட 39,565 ரூபாய் கேட்ட நிலையில், அரை சதவீதம் கூட பணம் ஒதுக்கவில்லை என்று விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Comments