தமிழகத்திற்கு ரூ.3.14 லட்சம் கோடி கடன்

தினமலர் செய்தி : சென்னை: தமிழக பட்ஜெட் அறிக்கையில் தமிழகத்திற்கு ரூ.3,14,366 கோடி கடன் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சி 6.5 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வருவாய் பற்றாக்குறை: 15,994 கோடியாகவும்
இந்தாண்டு தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2. 79 சதவீதமாகவும், 
அரசின் செலவு: 175,357 கோடியாகவும்,
அரசு ஊழியர்களுக்கான சம்பளம்: ரூ.46,332 கோடியாகவும்
ஓய்வூதியம்: ரூ.20,577 கோடியாகவும் இருக்கும் எனவும்,
கட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 7 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்
கால்நடை பராமரிப்புக்கு ரூ.1.,161 கோடி ஒதுக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments