2019 பார்லி.,தேர்தலில் மொபைல் போன் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்: மோடி

புதுடில்லி: 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மொபைல் போன் வாயிலான தகவல் தொடர்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
கர்நாடகா , ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில பா.ஜ. எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. கூட்டத்தின் போது மோடி பேசியதாவது,

ஒவ்வொரு எம்.பி.க்களும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அவசியம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக மொபைல் போன் வாயிலாக , பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்ஆப் ஆகிய சமூக வலைதளங்களில் நீங்கள் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். வரும் 2019-ம் ஆண்டு பார்லி.லோகசபா தேர்தலில் மொபைல் போன் வாயிலான தகவல் தொடர்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

எனவே அதனை நீங்கள் சரியான பயன்படுத்தி கொள்ள வேண்டுமெனில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை நன்கு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.

Comments