சசிகலா அதிமுக பொது செயலராக தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக சசிகலா புஷ்பா மற்றும் ஓ.பி.எஸ்., தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து விளக்கம் அளிக்கசசிகலாவுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், அவருக்கு பதில் தினகரன் பதில் அளித்தார். இதனை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதனையடுத்து சசிகலா தேர்தல் ஆணையத்திற்கு விளக்கமளித்தார். இதற்கு ஓ.பி.எஸ்., தரப்பினர் நேற்று விரிவாக பதில் விளக்கமளித்தனர். இன்று ஓ.பி.எஸ்., தரப்பினர் நேரில் சென்று பொது செயலர் விவகாரம் தொடர்பாக விளக்கமளித்தனர்.
இதனிடையே, சசிகலா நியமனம் தொடர்பாக வரும் 20ம் தேதிக்குள் முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இரு தரப்பு மனுக்களும் பரிசீலனையில் உள்ளன. அதிமுக சட்ட விதிகளின்படி முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
Comments