செம்மரம் கடத்த முயன்ற 174 தமிழர்கள் கைது

தினமலர் செய்தி : விஜயவாடா: ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற 174 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். கடப்பா மாவட்டம் காஜூப்பேட்டையில் 16 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில் லங்கமல்லா என்ற இடத்தில் 156 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 10 டன் செம்மரம், 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments