தி.மு.க., வேட்பாளர் நாளை( மார்ச் 15-ல்)அறிவிப்பு : ஸ்டாலின்

தினமலர் செய்தி : சென்னை: ஆர்.கே.நகரில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் நாளை( மார்ச்15-ல்) அறிவிக்கப்படும் என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார். 

யாரையும் போட்டியாக கருதவில்லை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தி.மு.க., தலைவர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்திய பின் தி.மு.க., வேட்பாளர் நாளை( 15-ம் தேதி)அறிவிக்கப்படும் . தேர்தலில் யாரையும் போட்டியாக கருதாமல் மக்களை சந்திக்க உள்ளோம். 

மக்கள் பாராட்டும் வகையில் செயல்பாடு

சட்டசபையில் மக்களின் பாராட்டு பெறும் வகையில் தி.மு.க.,வின் செயல்பாடு இருக்கும் என ஸ்டாலின் கூறினார்.

Comments