தினமலர் செய்தி : புதுடில்லி: வரும் ஏப்ரல் 12ம் தேதி ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு வேட்புமனு தாக்கல் மார்ச்16ம் தேதி துவங்குகிறது. 23ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.24 ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடக்கும். 27 ம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெற கடைசிநாளாகும். ஓட்டு எண்ணிக்கை ஏப்ரல் 15ம் தேதி நடைபெற உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்.கே. நகர் தொகுதி காலியாக உள்ளது.
Comments