கோடி கோடியாக கொள்ளையடித்த மன்னார்குடி மாபியா கும்பல் சசிகலா குடும்பம் - ஸ்டாலின்

Mannargudi Mafia gang is Sasikala family, says M K Stalin OneIndia News : சென்னை : தமிழகம் கொள்ளைக்கும்பலிடம் சிக்கிவிடக்கூடாது என்பதே மக்களின் எண்ணம் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். கோடி கோடியாக கொள்ளையடித்த மன்னார்குடி மாபியா கும்பல் சசிகலா குடும்பம் என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது சசிகலாவின் பினாமி ஆட்சி என்று குற்றம் சாட்டினார். தமிழகம் கொள்கைக்கும்பலிடம் சிக்கிவிடக்கூடாது என்பதே மக்களின் எண்ணம் என்றும், அது வரக் கூடாது என்பதில் மக்கள் விழிப்புடன் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக இளைஞர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் தடுக்க வேண்டும் என்றும், தமிழகத்தைக் காப்பாற்ற மக்கள் உடனடியாக ஆட்சியை தூக்கி எறியும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்றும், பிப்ரவரி 18ஆம் தேதி நடந்த சம்பவங்களைப் பற்றி குடியரசுத்தலைவரிடம் முறையிடுவோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்த உள்ளதாகவும், அதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Comments