ஓபிஎஸ் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் கட்சியில் சேர்ப்போம்.. இறங்கி வரும் சசிகலா தரப்பு!

thangathamizh selvan Mla says about opsOneIndia News : தேனி: ஓ.பன்னீர்செல்வம் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுகவில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று சசிகலா தரப்பு தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டது. சசிகலாவிற்கு எதிராக சராமரி குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார் ஓ.பன்னீர் செல்வம். தான் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாகவும் கூறினார். பன்னீர் செல்வத்தின் பேட்டி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இதனையடுத்து அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளவுபட்டது. இதையடுத்து முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார்.

ஆனாலும் கட்சியினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் ஓபிஎஸ் ஆதரவு குறையவில்லை. மக்கள் ஆதரவு அமோகமாக இருந்தது. இந்நிலையில் மேலும் சசிகலாவின் எதிர்ப்புகளை தனக்கு சாதகமாக அறுவடை செய்ய பன்னீர்செல்வமும், தீபாவும் திட்டமிட்டு வரும் பிப்ரவரி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் சசிகலா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் தேனியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன், மறப்போம், மன்னிப்போம் என்ற வகையில் ஒ.பன்னீர்செல்வம் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்றார்.

Comments