'ரிமோட் கன்ட்ரோல்' ஆட்சி தேவையா?: ஸ்டாலின் கேள்வி

தினமலர் செய்தி : திருச்சி: பெங்களூருவிலிருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் ஆட்சி தேவையா என தி.முக. செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
சுயநலத்திற்கு அல்ல:

நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது சட்டசபையில் நடந்த சம்பவங்களை கண்டித்து திருச்சியில் ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்தை முடித்து வைத்து ஸ்டாலின் பேசியதாவது :இந்த போராட்டம் ஒரு கட்சி சார்பில் நடக்கும் போராட்டம் அல்ல. சுயநலத்திற்காக நடக்கும் போராட்டம் அல்ல. பினாமி ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நடக்கும் போராட்டம். இது வெறும் தி.மு.க.,வின் போராட்டம் என யாரும் கருத வேண்டாம். எதிர்கால சந்ததி நிம்மதியாக வாழ தமிழகத்தை நாம் காப்பாற்றியாக வேண்டாம்.

ஜெ.,க்கு ஓட்டு:

மன்னார்குடி பகுதி மக்களும், தி.மு.க.,வை ஆதரித்துள்ளனர். இனிமேல், மன்னார்குடி மாபியா என அழைத்து மன்னார்குடி மக்கள் மனதை புண்படுத்த மாட்டேன். இதற்காக வருத்தப்படுகிறேன். இனிமேல், இது வெறும் மாபியா கும்பல் என மட்டுமே அழைப்போம். மாபியா கும்பலிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும். ஜெ., ஆட்சி அமைய தான் மக்கள் ஒட்டு போட்டனர். பினாமி ஆட்சிக்கு அல்ல. பெங்களூரு சிறையில் இருந்து இயக்கப்படும் 'ரிமோட் கன்ட்ரோல்' ஆட்சி தேவையா? ஜெ., மருத்துவமனையில் இருந்த போது முறையான தகவல்கள் ஆதாரத்துடன் வெளியிடப்படவில்லை. ஜெ., மர்ம மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தினால், சசிகலா ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க நேரிடும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments