ஜெ., ஆட்சியில் எந்த துறையிலும் முன்னேற்றம் இல்லை:ஸ்டாலின்

தினமலர் செய்தி : காஞ்சிபுரம்: தி.மு.க.,வைப்போல் வெற்றி பெற்ற கட்சியும், தோல்வி அடைந்த கட்சியும் எதுவும் இல்லை என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார். 
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் மாற்று கட்சியினர், தி.மு.க.,வில் இணையும் விழாவில் அவர் பேசியதாவது: கடந்த 5 ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் எந்த துறையிலும் முன்னேற்றம் இல்லை . ஜெயலலிதா சிகிச்சையின் போது அவர் உடல் நிலை குறித்து அவருடன் இருந்தவர்கள் கவலைப்பட வில்லை . அப்போதே சதி ஆரம்பமாகி விட்டது. ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து முறையான உண்மையான தகவல்கள் வெளியிடப்பட வில்லை. இவ்வாறு பேசினார்.

Comments