தலைமை செயலகத்தில் தி.மு.க., செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக திமுக சார்பில் சட்டசபை செயலாளரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். இந்த கடிதத்தின் நகலை,சபாநாயகரிடமும் கொடுத்துள்ளோம். சட்டசபையில் சட்டை கிழிக்கப்பட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் குறித்து பதில் சொல்ல விருப்பமில்லை. சட்டசபையில் நடந்தது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருகிறோம். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். ரேசன் கடைகளில் உணவு பொருட்கள் சரியாக வழங்கவில்லை என்பது தொடர்பான புகார் குறித்து பத்திரிகையாளர்கள் தான், தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரிடம் கேட்டு விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments