எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த திட்டங்கள் எதுவும் நிறைவேறாது: மு.க.ஸ்டாலின் பேட்டி

m.k stalin press meet in anna arivalayam about tn assemblyOneIndia News : சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த திட்டங்கள் எதுவும் நிறைவேற்ற போவதில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சட்ட சபை சரியான முறையில் நடைப்பெறவில்லை. சபை நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பினால் மக்கள் தெரிய வாய்ப்பு உள்ளது.

சட்டசபை நிகழ்வுகள் முழுவதும் அதிமுகவின் தொலைக்காட்சி மட்டும் படப்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் வெட்டி ஒட்டப்பட்ட காட்சியாக தான் சட்டசபை நிகழ்வுகள் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளதற்கு சமீபத்தில் நடந்த கொலைகளே உதாரணம். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போலீஸ் பயன்படுத்தவில்லை. ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் எடப்பாடி பழனிச்சாமி தோற்றிருப்பார். எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த திட்டங்கள் எதுவும் நிறைவேற்ற போவதில்லை. தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்ட பிறகு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Comments