வயது மூப்பினால் கருணாநிதி பாதிப்பு... பேச்சு பயிற்சி தருகிறோம் - ஸ்டாலின்

Karunanidhi is recovering: Stalin OneIndia News : சென்னை: அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், அதிமுக அரசை பினாமி அரசு என்று குற்றம் சாட்டினார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓபிஎஸ் கூட புகார் அளித்துள்ளார். சசிகலாவின் பினாமி ஆட்சியை எதிர்த்தும் பிப்ரவரி 22ஆம் தேதி திமுக உண்ணாவிரத போராட்டம் தமிழக மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்படுகிறது. திருச்சியில் நடைப்பெறும் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். இது நீதிகிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டமாக நடைப்பெற உள்ளது என்றார்.

இதனையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், கருணாநிதியின் உடல் நலம் குறித்து விளக்கம் அளித்தார். கருணாநிக்கு வயது மூப்பு காரணமாக சில சங்கடங்கள் உள்ளன. உபாதைகள் உள்ளன. அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு பேச்சுப் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. பேசுவதற்கான பயிற்சி எடுத்து வருகிறார். விரைவில் குணமடைவார் என எதிர்பார்க்கிறோம் என்றார். உடல்நலம் பாதிப்பில் இருந்து கருணாநிதி மீண்டு வருகிறார் தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

Comments