ஜெ. மரணத்திற்கு சசிகலா குடும்பமே காரணம் என மக்கள் நினைக்கின்றனர் - ஸ்டாலின்

stalin Accusation on sasikala OneIndia News : சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா மற்றும் அவரது குடும்பமே காரணம் என மக்கள் நினைக்கின்றனர் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின்,கடந்த 9 மாத காலமாக தமிழகம் எந்த நிலையில் உள்ளது என்று மக்களுக்கு தெரியும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்ணா மருத்துவமனையில் இருந்த போது அரசு சார்பில் சிகிச்சை குறித்து அறிக்கை தரப்பட்டது என்றும், ஜெயலலிதா மறைவு என்ற தகவல் கூட குழப்பமான நிலையில் வெளியிடப்பட்டது என்று ஸ்டாலின் தெரிவித்தார். ஜெயலலிதா மறைந்த செய்தி வெளியாகும் முன்பே அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலும், மரணத்திலும் மர்மம் உள்ளது. ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா மற்றும் அவரது குடும்பமே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.

Comments