சசிகலா, இளவரசி சொகுசு அறைக்கு மாற்றம்

தினமலர் செய்தி : பெங்களூரு: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி ஆகியோர் டிவி, கட்டில் ஆகிய வசதிகளுடன் கூடிய சொகுசு அறைக்கு மாற்றப்பட்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் தங்களுக்கு தனி அறை, மினரல் வாட்டர், வீட்டு சாப்பாடு உள்ளிட்ட வசதிகளை கேட்டு சிறை நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தனர். ஆனால், சிறை நிர்வாகம் அனுமதி கொடுக்காமல் இருந்தது.

இந்நிலையில், சசிகலா, இளவரசி ஆகியோர், டிவி, கட்டில் பேன், நாளிதழ்கள் படிக்கும் வசதி கொண்ட தனி சொகுசு அறைக்கு மாற்றப்பட்டனர் . இதனையடுத்து அவர்களுக்கு 2 பெட்ஷீட் , ஒரு தலையணை, ஒரு கட்டில் , ஒரு மெத்தை, இருவருக்கும் பொதுவாக டி.வி., மற்றும் 2 நாளிதழ்கள், வெளியில் இருந்து பழங்கள்,சாப்பாடு போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சுதாகரனுக்கு இந்த வசதி அளிக்கப்படவில்லை.

Comments