இதனையடுத்து சட்டசபை நிகழ்வுகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கவர்னர், சட்டசபை செயலாளருக்கு உத்தரவிட்டார். இது குறித்து இன்று காலை தலைமை செயலகத்தில் சபாநாயகர், துணை சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் சட்டசபை நிகழ்வுகள் குறித்த அறிக்கையை சட்டசபை செயலாளர் ஜமாலுதீன், கவர்னர் மாளிகையில் நேரில் அளித்தார். சட்டசபை நிகழ்வுகள் குறித்த வீடியோவும் கவர்னர் மாளிகையில் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கவர்னர் மும்பை சென்றுள்ளதால், அறிக்கை அளிக்கப்பட்டது தொடர்பாக கவர்னருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments