நெருக்கடி சீனியர் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சாதி ரீதியிலான எம்.எல்.ஏ.க்கள் தினகரனுக்கு நெருக்கடி தரத்துவங்கியுள்ளனர் என்று அதிமுக வட்டாரங்கள் நம்மிடம் தெரிவிக்கின்றன. பெரும்பான்மை நிரூபித்த பிறகு கேபினெட்டை மாற்றியமைப்போம் என உறுதி தந்திருந்ததை நினைவுபடுத்தி அமைச்சர் பதவியை கேட்டு நச்சரிக்க தொடங்கியுள்ளனராம்.
வாரிய தலைவர் அமைச்சர் பதவி என்பது குறிப்பிட்ட அளவுக்கே நிரப்ப முடியும். இருக்கும் அமைச்சர்களை ஜெயலலிதா காலத்தை போல திடீரென மாற்ற முடியாது என்பதை உணர்ந்துள்ள பல விவரமான சீனியர்கள், அமைச்சர் பதவிக்கு இணையான வாரியத் தலைவர் பதவியை கேட்டு நச்சரிக்க தொடங்கியுள்ளனராம்.
சிறையில் குமுறல் இதை எப்படி சமாளிப்பது என்பது தினகரனுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. பட்ஜெட் முடிந்ததும் நிச்சயம் வாய்ப்பு தருகிறோம். இது பற்றி சின்னம்மாவை சந்தித்தும் பேசுகிறேன் என சொல்லி சமாதானப்பத்தியுள்ளராம் தினகரன். நேற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுடன், தினகரன் இதுகுறித்து வெகு நேரம் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 மணி நேரம் இதுகுறித்து தினகரன், தனது சித்தி சசிகலாவிடம் ஆலோசனை கேட்டாராம்.
பெண் சீனியர்கள் அமைச்சர் பதவி, வாரியத் தலைவர் பதவி பிரச்சினையால் கட்சிக்குள் கலகம் வந்துவிடக் கூடாது என்று ஸ்ட்ரிக்டாக சொல்லியுள்ளாராம், அதிமுகவின் சின்னம்மா. கோகுல இந்திரா, வளர்மதி போன்றோர் சிறையில் சசிகலாவை சந்தித்து, தங்களுக்கு வாரிய தலைவர் பதவியை அளிக்க வேண்டும் என்று கேட்க திட்டமிட்டுள்ளார்களாம்.
Comments