தினமலர் செய்தி : புதுடில்லி : டில்லியின் சங்கம் விகார் பகுதியில் உள்ள எஸ்பிஐ., ஏடிஎம்.,ல் போலி ரூ.2000 நோட்டுக்கள் வைக்கப்பட்டிருந்தன.ரோஹித் குமார் என்ற இளைஞர், தனியார் நிறுவனம் ஒன்றில் கஸ்டமர் கேர் எக்சிக்யூடிவாக பணியாற்றி வருகிறார். இவர் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்.,ல் ரூ.8000 பணம் எடுத்துள்ளார். ரூ.2000 நோட்டுக்களாக எடுக்கப்பட்ட பணம் அனைத்தும் போலி என்பது தெரிய வந்தது. அந்த போலி ரூ.2000 நோட்டில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா முத்திரைக்கு பதிலாக சில்ட்ரன்ஸ் பேங்க் ஆப் இந்தியா என முத்திரை இடம்பெற்றிருந்தது.
இது தொடர்பாக அந்த இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார். ரோஹித்தின் புகாரின் பேரில், குறிப்பிட்ட ஏடிஎம்.,ல் ஆய்வு செய்த போலீசார், அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக எஸ்பிஐ வங்கி அதிகாரிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments