'நன்றாக பேசி வருகிறார் ஜெ.,' -அப்போலோ அறிக்கை

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்போலோ 10-வது அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், 'முதல்வர் அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. நன்றாக அவர் பேசி வருகிறார். சிறப்பு மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர்களின் அறிவுரைகளின் பேரில் சிகிச்சை தரப்படுகிறது. ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்' என கூறப்பட்டுள்ளது. 

மேலும், தீவிர சிகிச்சை நிபுணர்கள், இதய சிகிச்சை நிபுணர்கள், தொற்றுநோய், சர்க்கரை நோய் குழுவினரது கவனத்திலும், பிசியோத்தெரபி நிபுணர்களால் தொடர் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போலோவின் 9-வது அறிக்கை கடந்த 10-ம் தேதி வெளியாகியிருந்தது.

Comments