முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ம் தேதி இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலாே மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த முதல்வருக்கு சிகிச்சை அளிப்பதற்காக கடந்த மாதம் 30-ம் தேதி லண்டன் டாக்டர் ரிச்சர்டு, அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். அவர், முதல்வருக்கு தீவிர சிகிச்சை அளித்தார். பின்னர் லண்டன் சென்ற டாக்டர் ரிச்சர்டு, மீண்டும் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை அளித்தார். இதைத் தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும், முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில், முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூர் டாக்டர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர்கள், டாக்டர் ரிச்சர்ட்டின் அறிவுறுத்தலின் பேரில் சிங்கப்பூர் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே, கடந்த 14-ம் தேதியில் இருந்து முதல்வரின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளித்து வந்த டாக்டர் ரிச்சர்டு இன்று லண்டன் புறப்பட்டு சென்றார். எய்ம்ஸ் மருத்துவர்களும் டெல்லி சென்றனர்.
Comments