தமிழக அமைச்சரவை இன்று மீண்டும் கூடுகிறது

தினமலர் செய்தி : சென்னை : தமிழக அமைச்சரவை கூட்டம், நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், இன்று(அக்.,24) நடக்கிறது.
ஓ.பி.எஸ்., தலைமையில்...

முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது வசமிருந்த இலாகாக்களை, நிதி அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்ததோடு, அவர் தலைமையில் அமைச்சரவை கூட்டங்கள் நடத்தவும் அனுமதி அளித்து, கவர்னர் உத்தரவிட்டார். அதனால், அக்., 19ல், தமிழக அமைச்சரவை கூட்டம், பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. இதில், உள்ளாட்சிகளை நிர்வகிக்க, தனி அதிகாரிகள் நியமித்தல், அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகள் பதிவு தொடர்பாக, பல முடிவுகள் எடுக்கப்பட்டன. 

காவிரி பிரச்னை :

இந்நிலையில், இரண்டாவது முறையாக, பன்னீர்செல்வம் தலைமையில், இன்று காலை, அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. இதில், காவிரி பிரச்னை குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என, தெரிகிறது. காவிரி பிரச்னை தொடர்பாக, நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு, தி.மு.க., அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்றைய அமைச்சரவைக் கூட்டம், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Comments