ஆளுநர் வருகை குறித்து பின்னர் ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: ஆளுநருக்கு அப்பல்லோ மருத்துவமனை சேர்மன் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, முதல்வரின் உடல் நலம் குறித்து விளக்கம் அளித்தார். சுவாச நிபுணர்கள், இதய நிபுணர்கள், அவசர சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய ஒரு பெரும் மருத்துவ குழு முதல்வருக்கு சிகிச்சையளித்து வருவதாக பிரதாப் ரெட்டி தெரிவித்தார். சுவாச உதவி, பிசியோதெரபி சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளை தொடர்ந்து முதல்வருக்கு அளித்துவருவதாக பிரதாப் ரெட்டி தெரிவித்தார். சிகிச்சைக்கு முதல்வர் உடல்நிலை ஒத்துழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
முதல்வர் சிகிச்சை பெறும் வார்டுவரை ஆளுநர் சென்று நலம் விசாரித்தார். முதல்வர் வேகமாக குணமடைந்து வருவதற்கு ஆளுநர் மகிழ்ச்சி தெரிவித்தார். முதல்வருக்கு சிறப்பான சிகிச்சையளித்துவரும் மருத்துவர் குழுவிற்கு நன்றிகளை ஆளுநர் தெரிவித்தார். லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் ராமமோகன ராவ், அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர். இவ்வாறு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
Comments