ஸ்மார்ட்போன் பேட்டரி வெளியிடும் நச்சுவாயுக்கள்

தினமலர் செய்தி : வாஷிங்டன் : ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லட்களில் உள்ள பேட்டரிகளில் இருந்து நூறுக்கும் மேற்பட்ட அபாயகரான வாயுக்கள் வெளியேற்றப்படுவது புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

அபாயகரமான வாயுக்கள்:

அமெரிக்காவைச் சேர்ந்த என்பிசி டிபன்ஸ் கழகம் மற்றும் சீனாவின் சிங்குவா பல்கலைகழகம் ஆகியன இணைந்து உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களை பயன்படுத்துவோரிடம் ஆய்வு மேற்கொண்டன. இதில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லட்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகளில் இருந்து நூறுக்கும் மேற்பட்ட அபாயகரமான வாயுக்கள் வெளியேற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் முக்கியமானது சுற்றுச்சூழல் பாதிப்பு, தோல், கண்கள் அரிப்பு மற்றும் மூச்சுகுழல் பிரச்னைகளை ஏற்படுத்தும் கார்பன் மோனாக்சைட் வாயுவும் ஒன்று. 

ஆபத்தை உணராத மக்கள் :

இந்த ரீசார்ஜ் செய்யும் வகையிலான பேட்டரிகளை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்தை உணராமல் கோடிக்கணக்கான மக்கள் இந்த பேட்டரிகளை வாங்கி வருகின்றனர். ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லட்கள் வெப்பமடையும் போதும், சேதமடைந்த அல்லது நீண்டகாலம் ஆன பேட்டரிகளை தொடர்ந்து பயன்படுத்தும் போதும் இந்த நச்சுவாயுக்கள் வெளியேறுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த பேட்டரிகளை தொடர்ந்து பயன்படுத்தும் போது, 50 சதவீதம் சார்ஜ் ஏற்றினாலே அதில் இருந்து நச்சு வாயுக்கள் வெளியேற துவங்கி விடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Comments