தம்பிதுரை மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் பிரச்சினை: சசிகலா புஷ்பா வார்னிங்

Privilege motion against Loksabha Dy.Speaker Tambidurai, says Sasikala PushbaOneIndia News : டெல்லி: தம்பிதுரை மீது நாடாளுமன்ற உரிமைக் குழுவில் புகார் செய்வேன் என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள ராஜ்யசபா எம்.பியான சசிகலா புஷ்பா தடாலடியாக தெரிவித்துள்ளார். திமுக எம்.பி திருச்சி சிவாவை டெல்லி ஏர்போர்ட்டில் வைத்து கன்னத்தில் அறைந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் சசிகலா புஷ்பா.

இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதாவிடம், சசிகலா புஷ்பா அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அப்போது ஜெயலலிதா, தன்னை அறைந்ததாகவும், ராஜ்யசபாவில் உரையாற்றி தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியவர் சசிகலா புஷ்பா. இந்நிலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் உரிமை மீறல் குழுவிடம் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரைக்கு எதிராக புகார் அளிக்க உள்ளேன். பெண்ணாக, எம்பியாக என்னிடம் முறையாக நடந்து கொள்ளவில்லை தம்பிதுரை. அவர் என்னை கைதி போல நடத்தியதால் உரிமை மீறல் புகார் தெரிவிப்பேன் என கூறியுள்ளார். துணை சபாநாயகர் மீது ராஜ்யசபாவில் உரிமை மீறல் பிரச்சினை கிளப்புவதாக சசிகலா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவிடம், சசிகலா புஷ்பாவை அழைத்து சென்றபோதும், டெல்லியில் வைத்தும், தம்பிதுரை, தன்னிடம் கெடுபிடி செய்ததாக சசிகலா புஷ்பா கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Comments