தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு

தினமலர் செய்தி : சென்னை: தமிழகத்தில் நடக்கவிருக்கும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளரை திமுக தலைவர் கருணாநிதி இன்று அறிவித்தார்.
அதிமுக - திமுக., கடும் போட்டி:

வரும் 19ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்பாளர்களை அதிமுக அறிவித்து விட்டது. இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்து விட்டது. இந்த தேர்தலை பொறுத்த மட்டில் அதிமுக - திமுக., இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

திமுக., வேட்பாளர்ளுக்கான நேர்காணலில் கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன், துரைமுருகன் ஆகியோர் போட்டியிட விரும்புவர்களிடம் கேள்விகள் கேட்டனர். அரவக்குறிச்சியியில் 10 பேரும், தஞ்சாவூரில் 6 பேரும், திருப்பரங்குன்றத்தில் 7 பேரும் பங்கேற்றனர்.

இதன் அடிப்படையில் இறுதி பட்டியலை கட்சி தலைவர் கருணாநிதி வேட்பாளர்களை அறிவித்தார். இதன்படி;
01. அரவக்குறிச்சி - கே.சி., பழனிச்சாமி
02. தஞ்சாவூர் - டாக்டர். அஞ்சுகம் பூபதி
03. திருப்பரங்குன்றம் - டாக்டர். சரவணன் ஆகியோர் போட்டியிட வுள்ளனர்.

தி.மு.க., வெற்றி:

பத்திரிகையாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறியதாவது: சட்டம் ஒழுங்கு பிரச்னையை முறைப்படி எடுத்துக்கூறி தேர்தலை சந்திப்போம். தமிழகத்தில் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. மக்கள் பிரச்னைகளை முன் வைத்தும் பிரசாரம் செய்வோம். தேர்தல் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால், தி.முக.., நிச்சயம் வெற்றி பெறும் எனக்கூறினார்.

Comments