செந்தில் பாலாஜி, பழனிச்சாமிக்கு எதிராக ஐ கோர்ட்டில் வழக்கு

தினமலர் செய்தி : சென்னை:கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்களான பழனிச்சாமி, செந்தில் பாலாஜியின் வேட்பு மனுக்களை நிராகரிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனு:

அரவக்குறிச்சி தொகுதியில், தி.மு.க., சார்பில் கே.சி.பழனிச்சாமி; அ.தி.மு.க., சார்பில் செந்தில் பாலாஜி போட்டி யிட்டனர். வேட்பாளர்களின் ஆதரவாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக, ஏராளமான புகார்கள் வந்தன.

தி.மு.க.,வேட்பாளரின் மகன் வீட்டில், வருமான வரித்துறை சோதனை நடத்தியதில், இரண்டு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது; தேர்தல் ரத்து செய்யப்பட்டது. வேட்பாளர்கள் பழனிச்சாமி, செந்தில் பாலாஜி இருவரும், ஜனநாயக நடை முறையை சீரழித்துவிட்டனர். இவர்களின் வேட்பு மனுக்களை நிராகரிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Comments