தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு, நவ., 19ல், தேர்தல் நடக்கிறது; வேட்புமனு தாக்கல், நேற்று துவங்கியது.
எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில், தி.மு.க.,வும், அ.தி.மு.க., வும் உள்ளன. இந்நிலையில், ஏற்கனவே நடந்த தேர்தல் களுக்கு, வியூகம் வகுத்து கொடுத்த தலைவர்கள், தற்போது ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
முதல்வரும், அ.தி.மு.க., பொதுச் செயலருமான ஜெயலலிதா, உடல் நிலை சரியில்லாமல், அப்பல்லோ மருத்துவமனையில், தொடர் சிகிச்சை யில் உள்ளார்; ஒவ்வாமை பிரச்னையால், தி.மு.க., தலைவர் கருணாநிதியும் பாதிக்கப்பட்டு, 15 நாட்க ளாக வீட்டில் ஓய்வெடுத்துவருகிறார். இரு தலைவர் களும், மேலும் பல நாட்கள் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இதனால், பிரசாரம் மட்டுமின்றி, வெற்றி வியூகத்தை வகுத்து தர முடியாத நிலையி லும், இரு கட்சி தலைவர்களும் உள்ளனர்.
இதனால், எப்போதும் இல்லாத தேர்தல் நெருக்கடியை, இரு கட்சிகளும் சந்திக்கின்றன. வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம், இரு கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஏற்பட்டு உள்ளதால், செய்வதறியாது தவிக்கின்றனர்.
Comments