உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம்

தினமலர் செய்தி : சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அதிகாரிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி அமைப்பின் முதல் கூட்டம் நடைபெறும் வரை நிர்வாகத்தை கவனிப்பார்கள்.
தேர்தல் ரத்து

முன்னதாக, தமிழகத்தில் அக்., 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றபடவில்லை என்று தி.மு.க., சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும், தேர்தல் ஆணையம் முறையான இட ஒதுக்கீட்டுடன் டிசம்பர் 31 ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அரசாணை

இந்நிலையில், தற்போதைய உள்ளாட்சி அமைப்பின் பதவிக்காலம் அக்.,24 ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணைக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் அளித்துள்ளார்.

டிச., 31 வரை

இ்ந்த அரசாணையின்படி, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தை தனி அதி்காரிகள் கவனிப்பார்கள். அவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளின் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய பணிகளை கவனிப்பார்கள். இந்த அதிகாரிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி அமைப்பின் முதல் கூட்டம் நடைபெறும் வரை நிர்வாகத்தை கவனிப்பார்கள்.

Comments