ஏற்கனவே, இந்த தொகுதியில் களம் இறக்கப் பட்ட, டாக்டர் அஞ்சுகம் பூபதி இருக்க, மீண்டும் எதற்காக விருப்ப மனு, நேர்காணல் என, கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.
அஞ்சுகம் பூபதி, ஏற்கனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பல ரவுண்டு பிரசாரத்தை முடித்திருந்த நிலையில் தான், தேர்தல் நிறுத்தப்பட்டது. அஞ்சுகம் பூபதி மீது எவ்வித குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், கட்சி சார்பில் மீண்டும், ஏன் விருப்ப மனு வாங்க வேண்டும்; நேர்காணல் நடத்த வேண்டும்?
ஒரத்தநாடு தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பின்வாங்கிய ராஜ்குமாரை, தஞ்சையில் நிறுத்த தலைமை திட்ட மிட்டு, இந்த காரியங்களை செய்து வருகிறது. ஒருவேளை அவர் நிறுத்தப்பட்டால், தேவையில்லாத சங்கடங்களை ஏற்படுத்தும்.இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.
வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
மூன்று சட்டசபை தொகுதி தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர் களிடம், தி.மு.க., தலைவர் கருணாநிதி, இன்று நேர்காணல் நடத்தி, வேட்பாளர்களை தேர்வு செய்கிறார்.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு, நவ., 19ல், தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க., சார்பில், வேட் பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.க., சார்பில், போட்டியிட விரும்பும் கட்சிக் காரர்களிடம் இருந்து, சென்னை அறிவாலயத் தில், விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட, தி.மு.க., மருத்துவ அணிமாநில துணை தலைவர் சரவணன், விருப்ப மனு அளித்துள்ளார். ஒன்றிய செயலர் ஈஸ்வரன்,கவுன்சிலர் போஸ்முத்தையா ஆகியோரும், விருப்ப மனு கொடுத்துள்ளனர்; சரவணனுக்கு, 'சீட்' கிடைக்க வாய்ப்புள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட, தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி செயலர், சன்.ராமநாதன், ஜெயபிரகாஷ், ஏற்கனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, அஞ்சுகம் பூபதி ஆகியோர், விருப்ப மனு அளித்துள்ளனர்; அஞ்சுகம் பூபதிக்கே, வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
அரவக்குறிச்சி தொகுதியில், முன்னாள் எம்.எல்.ஏ., - கே.சி.பழனிச்சாமிக்கு, 'சீட்' கிடைக்க வாய்ப்புள்ளதால், மற்றவர்கள் ஆர்வ மில்லாமல், விருப்ப மனு அளித்துள்ளனர்.
இருப்பினும், விருப்ப மனு அளித்தவர்களிடம், இன்று கருணாநிதி, பொது செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், முதன்மை செயலர் துரைமுருகன் ஆகியோர் நேர்காணல் நடத்துகின்றனர்; மாலையில், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
Comments