தினமலர் செய்தி : ஜம்மு : எல்லை பாதுகாப்பு படையினரை குறித்து பாக்., படைகள் தாக்கினால், அதற்காக அவர்கள் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும் என எல்லை பாதுகாப்பு படையினர் (பிஎஸ்எஸ்) தெரிவித்துள்ளனர்.
தக்க பதிலடி கிடைக்கும் :
எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறித்தும், பிஎஸ்எப் வீரர் குர்னாம் சிங் உயிரிழந்தது தொடர்பாகவும் எல்லை பாதுகாப்பு படையின் கூடுதல் இயக்குனர் அருண் குமார் கூறுகையில், அவர்கள் ஏதாவது செய்ய முயற்சித்தால் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம். பாக்., அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும். அதற்கு நாங்கள் முழுவதும் தயாராக இருக்கிறோம் என்றார்.
7 பாக்., வீரர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக கேட்டதற்கு, எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என எங்களால் சரியாக கூறமுடியவில்லை. ஆனால் நாங்கள் எல்லைக்கு அருகில் இருந்தோம். அப்போது எல்லைக்குள் நுழைந்து சுட்டவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினோம். அதில் பலர் தாக்கப்பட்டு, விழுந்தனர். எங்களுக்கு தகவல் கிடைத்து கொண்டு தான் உள்ளது. நாங்கள் முழு முனைப்புடன் தயாராக உள்ளோம் என்றார்.
Comments