ஜீன்ஸ், லெக்கின்ஸ் அணிய தடை: அரசு மருத்துவ கல்லூரி உத்தரவால் சர்ச்சை

தினமலர் செய்தி : திருவனந்தபுரம்: மாணவிகள் லெக்கின்ஸ், ஜீன்ஸ் அணிய அரசு மருத்துவ கல்லூரி உத்தரவிட்டுள்ளது, அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கல்லூரி துணை முதல்வர் இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும், வருகைப்பதிவேடு மற்றும் மதிப்பெண்கள் பெறவும் புதிய விதிகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் பேண்ட், சட்டை, ஷூ அணிந்தும், மாணவியர்கள் சுடிதார் அல்லது சேலை அணிந்தும் அடையாள அட்டையுடன்வெள்ளை நிற கோட்களை அணிந்து வர வேண்டும் எனு உத்தரவிடப்பட்டுள்ளது. வேறு வகை உடை அணிந்து கல்லூரி வளாகத்திற்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வளையல், கொலுசு போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட அறிவுரைப்படி தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவ கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Comments