இந்தியா மீது சாடல் :
பிம்ஸ்டெக் அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளையும் அழைத்த இந்தியா, பாகிஸ்தானை மட்டும் புறக்கணித்து விட்டது. பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்தியா அண்டை நாட்டிற்கு எதிராக இந்த சூழ்ச்சியை செய்துள்ளது. பிரிக்ஸ் மாநாடு நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு இஸ்லாமாபாத்தில் நடக்க இருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. பிரிக்ஸ் அமைப்பில் உள்ள மற்ற நாடுகளையும் சார்க் மாநாட்டை புறக்கணிக்குமாறு மறைமுகமாக அழுத்தம் கொடுத்தது.
வங்கதேசம், இலங்கை, தாய்லாந்து, மியான்மர், நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் மாநாட்டின் போது பாகிஸ்தானை நேரடியாக தாக்கின. மற்ற உறுப்பு நாடுகள், இந்தியா - பாகிஸ்தான் பதற்ற நிலையை மறைமுகமாக தாக்கி பேசின. சார்க் மாநாட்டிற்கு மாற்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், பாக்.,ஐ தனிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் பிரிக்ஸ் மாநாட்டை பெரிய அளவில் இந்தியா நடத்தி உள்ளது. இதன் மூலம் சிறிய நாடுகளிடையே பயத்தை ஏற்படுத்தி, இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது. இதற்கு காரணம் மற்ற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதார நிலை வலுவாக இருப்பதே என குறிப்பிட்டுள்ளன.
Comments